Wednesday, 25 July 2018

குழந்தைகள் -முதலுதவி பகுதி 4

குழந்தைகள் விளையாடும்போது சிறு சிறு அடிகள் படுவது இயற்கை. ரத்தம் வராமல் உள்காயமாகவோ அல்லது சுளுக்கு போலவோ அடிபட்டால் செய்யவேண்டிய முதலுதவி என்ன?
முதலில் சுளுக்கு என்றால் என்ன ?
நம் உடலில் உள்ள தசைகள் (muscle) மற்றும் தசைநார்களில்(tendon) அடிபட்டு இரத்தக்கசிவு ஏற்படும் போது வீக்கமும் வலியும் ஏற்படும். இதையே சுளுக்கு (sprains) என்று சொல்கிறோம்.
சிலர் சுளுக்கு வழிக்கிறேன் என்று சொல்லி ஏற்கனவே இருக்கும் இரத்தக் கட்டை நீவி விட்டு மேலும் வலியை அதிகப் படுத்துவார்கள். இது தவறான அணுகுமுறை.
குழந்தைகளுக்கு சுளுக்கு வழிக்கவே கூடாது .ஏனெனில் சில வேளைகளில் எலும்பு முறிவு கூட ஏற்பட்டிருக்கலாம். நாம் அழுத்தி வலிக்கும்போது குழந்தைகளின் மென்மையான எலும்புகள் மேலும் பாதிக்கப்படலாம்.
என்ன செய்யவேண்டும்?
RICE
R-Rest
I-ice
C-compression
E-Elevation
Rest :
அடிப்பட்ட பகுதிக்கு ஓய்வு தரவேண்டும் .அதாவது தொட்டு வழிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளோ செய்யக்கூடாது.
Ice :
உள்காயமாக இருந்தால் ,அதாவது ரத்தம் வெளியேறாமல் இருந்தால் பனிக்கட்டி ❄️ வைத்து ஒத்தடம் தரவேண்டும்.
Compression:
உள்காயத்தில் ரத்தக்கசிவு அதிகரிக்காமல் இருக்க அழுத்தி சிலநேரம் பிடிக்கலாம் அல்லது கம்ப்ரசன் பேண்டேஜ் போட்டுவிடலாம் .
Elevation:
அடிபட்ட பகுதியை சிறிது  உயர்த்தி வைப்பதன் மூலம் Tissue edema எனப்படும்  வீக்கம் குறையும் .
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றியும் வலி குறையவில்லையெனில் மருத்துவரை ஆலோசித்து தேவைப்பட்டால் நுண்கதிர் பரிசோதனை (X Ray ) செய்து கொள்ள வேண்டும்.

Friday, 20 July 2018

குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்கவேண்டிய முதலுதவி மருந்துகள்: பகுதி மூன்று

குழந்தைகளுக்கு வாந்தி வந்தால் .
குழந்தைகளுக்கு  காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கின்போது வாந்தி வரவாய்ப்புள்ளது. அப்படி வந்தால் நாம் தரும் மருந்தையோ அல்லது உணவிணையோ சாப்பிடமுடியாமலும் சாப்பிட்டால் வாந்தி வந்தும் குழந்தைகள் அவதியுறுவார்கள்.
Nausea - வாந்தி வருவதற்கு முன்பு வரும் குமட்டல் தன்மை
Vomiting- வாந்தி
குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்க உதவும் மருந்தை ஓரிரு வேளைகள் நாம் பயன்படுத்தலாம்.
இவற்றை தொடர்ந்து பயன்படுத்தவேண்டுமென்றால் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
பயன்படுத்த வேண்டிய மருந்து
Tab. Ondansetran  4mg
Trade names (emeset, vomikind, emitus etc,.)
ஒரு வயதில் இருந்து 12 வயதுவரைப் பயன்படுத்தலாம்.
மாத்திரையை வெறும் வயிற்றில் உணவு சாப்பிட 30 நிமிடத்திற்கு முன்பு தரவேண்டும்.
குழந்தையின் எடை 8 முதல் 15 வரை  பாதி மாத்திரையைத்  தரவேண்டும்.
15 கிலோ முதல் 30 கிலோ வரை ஒரு மாத்திரை தரவேண்டும்.
30 கிலோவுக்கு மேல் ஒன்னரை மாத்திரை முதல் 2 மாத்திரை வரைத் தரலாம்.
அடுத்த வேளை மாத்திரையை 6 மணிநேரம் கழித்து தரலாம். இரண்டு டோஸ்களில் சரியாகவில்லையெனில் கட்டாயம் உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவேண்டும்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்கவேண்டிய முதலுதவி மருந்துகள்: பகுதி இரண்டு

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால்:
  குழந்தைகளுக்கு தீக்காயமோ அல்லது சூடான திரவமோ பட்டால் செய்யவேண்டிய முதலுதவி :
1. டூத்பேஸ்ட், மாவு ,இங்க் போன்றவற்றை எடுத்து சிலர் போட்டுவிடுவார்கள் அது தவறான அணுகுமுறை.
2. சுத்தமான குளிர்ந்த நீரை சிறிதுநேரம் ஊற்றவேண்டும். அப்படி செய்வதால் திசு சேதாரமாவது குறையும்.
3. வீட்டில் Silver Nitrate Gel 0.2% (Silverex ) என்ற மருந்தினை வாங்கி வைத்திருக்க வேண்டும். அதனை உடனடியாக காயம்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
4.முதலுதவி செய்தபின் கட்டாயம் உங்கள் குழந்தை மருத்துவரை ஆலோசிக்கவேண்டும் .
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் :
குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டால் நீரிழப்பும், உப்பு சத்து இழப்பும் மிக வேகமாக வரும்.சரியான நேரத்தில் இந்த இழப்பை ஈடு செய்யவில்லையெனில் பெரும் ஆபத்தில் முடியலாம்.
இதனைத் தவிர்க்க ORS எனப்படும் பொடி மருந்தினை (ELECTRAL)  சுத்தமான நீரில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இதனை மருத்துவர் ஆலோசனையின்றி கூட நாமாகவே பயன்படுத்தலாம்.
ஓ.ஆர்.எஸ் பவுடர் பயன் படுத்தும் முறை:
ஒரு லிட்டர் கொதிக்கவைத்து ஆறவைத்த நீரில் ஒரு பாக்கெட் ORS பவுடரைக் கலந்து கொள்ளவேண்டும்.அப்படி கலந்தை கலவையை 24 மணி நேரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். குழந்தை வயிற்றுப்போக்கு போகும்போது இந்தக் கரைசலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாந்தி எடுத்தாலும் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கலாம்.
ORS சரியாக குடிக்கவில்லையென்றாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ மருத்துவரை உடன் அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
வெறும் தண்ணீராக போகும் வயிற்றுப்போக்கிற்கு ஆண்டி பயாடிக் மருந்துகள் தேவையில்லை.
ORS கரைசல் மற்றும் ZINC எனப்படும் துத்தநாக மருந்து மட்டுமே போதுமானது.
Zinc மருந்தை சிரப் அல்லது மாத்திரையாக 14 நாட்கள் கட்டாயம் தரவேண்டும்.